Friday 18 January 2013

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்



                             "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்காலை, 9:30 மணிக்கு தான், பள்ளி துவங்கும் என்றாலும், காலை, 8:00 மணிக்கே வந்து விடுகிறார்.வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி,
தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.
                                 
இது பற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும்போது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்கு சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!' எனக் கூறி ஆசுவாசப்படுத்துவார். எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார்இதற்காக, மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்
!

No comments:

Post a Comment