Wednesday 2 January 2013

டோபல் தேர்வு என்றால் என்ன?



                         ஏறக்குறைய 50 வருடங்களாக, ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, டோபல் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும்
கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது.
                      மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை. ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம். டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்குத் தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்களை எவை என்பதைப் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த டோபல் தேர்வு, எங்கெல்லாம் ஏற்கப்படுகிறது?
              வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மேலும், குடியேற்ற ஏஜென்சிகள்(United Kingdom Border Agency போன்றவை) மற்றும் உதவித்தொகை ஏஜென்சிகள்(Fulbright போன்றவை) ஆகியவற்றால், ஒரு மாணவரின் மொழித்திறனை சோதிக்க, இத்தேர்வு பயன்படுகிறது. டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் முழு பட்டியல்http://www.ets.org/Media/Tests/TOEFL/pdf/univo708.pdf என்ற வலைதளத்தில் கிடைக்கிறது.
டோபல் தேர்வை எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
            உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் பல்கலைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவுசெய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.
இத்தேர்வை எழுதுவதற்கான செலவு?
                            சர்வதேச மதிப்பில் 165ம், இந்திய மதிப்பில் ரூ.7,500ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
டோபல் தேர்வுக்கு, ஒருவர் தயாராகும் வழிமுறைகள் என்னென்ன?
             டோபல் தேர்வுக்கான கையேட்டின் 4ம் பதிப்பு, மாணவர்களுக்கு அதிக பயனளிக்கும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டில், 3 முழு நீள தேர்வுகளும், நூற்றுக்கணக்கான தேர்வு கேள்விகளும், essay தலைப்புகளும், பல ஆலோசனைகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம், இந்த கையேடு, மிகவும் பயனுள்ள ஒன்றாகத் திகழ்கிறது. இந்த கையேட்டை, ETS வடிவமைத்துள்ளது. ETS என்பது டோபல் தேர்வு மேம்படுத்துனர் ஆகும்.
            டோபல் ப்ரோகிராமானது, எந்த பயிற்சி வகுப்புகளையும் தற்சமயம் வழங்கவில்லை. மாறாக, பலவிதமான தயாராதல் உபகரணங்களை வழங்குகிறது. இந்த தயாராதல் உபகரணங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு http://www.toeflgoanywhere.org/content/toefl%C2%AE-test-prep-official-tools-help-you-prepare என்ற வலைத்தளம் செல்க.
டோபல் தொடர்பாக, இந்தியாவில் ஏதேனும் உதவித்தொகை வழங்கப்படுகிறதா?
              இந்தியாவில், மூன்றாவது ஆண்டாக, டோபல் உதவித்தொகை ப்ரோகிராமை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2013 டோபல் உதவித்தொகை ப்ரோகிராம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
டோபல் தேர்வில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?
              கடந்த நவம்பர் மாதம், TOEFL iBT வாசித்தல் பகுதியானது, சுருக்கப்பட்டது. இதன்மூலம், அப்பகுதியானது, 5 பத்திகளுக்கு பதில், 4 பத்திகளையேக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து ரீடிங் பத்திகள் மற்றும் கேள்விகள், மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, மாணவர்கள் தங்களை சிறப்பாக தயார் செய்துகொள்ள முடியும்.
            இவைத்தவிர, ஒரு கேள்வியை விட்டுவிட்டு, அடுத்தவற்றுக்கு சென்று, பின்னர் மீண்டும் விடுபட்டவற்றுக்கு விடையளிக்க முடியும் மற்றும் தங்களின் பதிலையும் மாற்ற முடியும். இந்த மாற்றம், தேர்வர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும், மதிப்பெண்களை, எலக்ட்ரானிக் முறையில், 10 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.
IELTS மற்றும் Pearson Test of English போன்ற தேர்வுகளிலிருந்து, டோபல் தேர்வு எவ்வாறு மாறுபட்டு திகழ்கிறது?
               டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் summarising passage போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, testing மற்றும் marking process போன்ற செயல்பாடுகளை தனிப்படுத்துகிறது. இதன்மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதிசெய்யப்படுகிறது. மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரேமாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான rater -களை பயன்படுத்துகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவுசெய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.
                இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் automated மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன்மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.
இந்தியாவில் டோபல் தேர்வெழுதுவோருக்கு, இலவச ஹெல்ப்லைன் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை உள்ளனவா?
               ஒரு மாணவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்து, டோபல் தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட TOEFL India costomer support centre உங்களுக்கு துணை புரியும். தொலைபேசி வாயிலாக, திங்கள் முதல் வெள்ளி வரையில், காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அதற்கான இலவச எண் 000-800-100-3780. மேலும் TOEFLsupport4India@ets.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவைத்தவிர, இந்திய மாணவர்களுக்கு உதவ, TOEFL program resource centre என்ற மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 919711237111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment