Friday 18 January 2013

மாணவர்களுக்கான அடையாள எண்!



                நாட்டில் தற்போது ஆதார் மற்றும் தேசிய அடையாள அட்டை என இருவகையான தனிநபர் அடையாள அட்டை வழங்கும் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை, 1 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 17 இலக்க எண்
கொண்டதனிநபர் அடையாள எண்வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இம்மாதிரியான திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான் தொடங்கப்பட்டுள்ளதுகர்நாடகாவில் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்களது தகவல்களை ஒருங்கிணைக்கவும், பள்ளிப்படிப்பை இடையில் விடுபவர்களை அறிந்து கொள்ளவும் தனிநபர் அடையாள எண் வழங்கும் திட்டத்தை அம்மாநில பள்ளிக்கல்விதுறை தொடங்கியுள்ளது
                                       இதன்படி ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவருக்கு ஒரு தனி எண் வழங்கப்படுகிறது. அந்த எண், அவர் பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை பயன்பாட்டில் இருக்கும். இதில் அவரது பிறந்த தேதி, பள்ளியில் சேர்ந்த தேதி, பெற்றோர் விவரம், வருகைப்பதிவு, எந்தப் பகுதி, விடுதி அல்லது வீட்டில் படிப்பவரா, எந்த வழிக்கல்வி மற்றும் இதர தகவல்கள் இதில் சேமிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் கல்வி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்இதற்காக தனி வெப்சைட், தற்போது பரிசார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ளது. 2013 பிப்., 2 வரை இது மாணவர்கள் மற்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்யப்பட்டு, இறுதியாக 2013 மார்ச் 5ல், இத்திட்டம் முழுமையாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்றும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment