Wednesday 16 January 2013

மின் சிக்கனத்தை வலியுறுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு



            மின் சிக்கனத்தை வலியுறுத்தி, அரசு தற்போது மாணவர்கள் வாயிலாக, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது. மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மாணவர்கள் மூலம்
விழிப்புணர்வை ஏற்படுத்த, இலவச நோட்டு புத்தகத்தில் மின்சிக்கன விழிப்புணர்வு வாசகங்களை அரசு அச்சிட்டுள்ளதுஅதில், "மின் சிக்கனம் தேவை இக்கணம்", "நீரின்றி அமையாது உலகு" என்பது திருவள்ளுவரின் கூற்று. தற்போது நீருடன் மின்சாரமும் மக்களின் வாழ்வுக்கும், வளமைக்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அனல், நீர், காற்று, சூரிய மற்றும் பல்வேறு மின் உற்பத்தியில் இருக்கும் சவால்களை கருத்தில் கொண்டும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலைவாசியை கருத்தில் கொண்டும், வீடுகள் மற்றும் பள்ளிகளில் மின் சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
                         ஆடம்பரமாக செலவழியும் மின்சாரத்தை சிக்கனம் செய்வதால், மின் பற்றாக்குறை குறையும். அதன் மூலம் அதிகப்படியான மின்சாரத்தை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியும். மின் உற்பத்தியில் இருக்கும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டால், ஒரு யூனிட் மின்சார சேமிப்பு, ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு சமம்தேவை இல்லாமல் இயங்கும் மின்விளக்குகள், மின்விசிறி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை அணைப்பதன் மூலம், மின்சாரத்தை சேமிக்கலாம். சாதாரண குண்டு பல்புக்கு பதிலாக சி.எப்.எல். எல்..டி. பல்புகளை பயன்படுத்தி, 60 சதம் மின்சாரத்தை சேமிப்போம்சூரிய ஓளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை (வாட்டர் ஹீட்டர்) பயன்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment