Tuesday 8 January 2013

ஜனவரி 9ல் வெளியாகிறது கேட் தேர்வு முடிவுகள்



                     கேட் தேர்வு முடிவுகள் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 11 முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற கணினி மயமாக்கப்பட்ட கேட் தேர்வில் நாடு முழுவதும் 2.15 லட்சம் பேர் எழுதினர். அதில் தமிழகத்தின் பங்களிப்பு 13,121 பேர். கேட் பதிவு எண்
மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பயன்படுத்தி log on செய்து, தங்களின் முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை இந்தாண்டு டிசம்பர் 31 வரை குறிப்பிட்ட இணையதளத்தில் காணலாம். தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாளே, முடிவுகளைப் பார்க்க முந்த வேண்டாம். ஏனெனில், அனைவருமே அப்போதுதான் முயல்வர். எனவே, பொறுமையாகவே பார்க்கலாம்.
                            கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் short list செய்யப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட ஐஐஎம்., களிலிருந்து தொலைபேசி மூலமாக அழைக்கப்படுவார்கள். மொத்தம் 13 ஐஐஎம்.,கள் உள்ளன. ஒவ்வொன்றுமே, தனக்குரிய தனியான சேர்க்கை விதிமுறைகளை வைத்துள்ளன. சில ஐஐஎம்.,கள் பெண்களுக்கும், பொறியியல் பின்னணியை சாராதவர்களுக்கும் அதிக பாயிண்டுகள் வழங்குகின்றன

No comments:

Post a Comment