Wednesday 30 January 2013

சிறந்த மாணவர்களுக்குப் பரிசு: பிப்.,8க்குள் விண்ணப்பிக்க வேண்டும்



12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும்  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும்  சிறுபான்மையினர் மாணவர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவ
மாணவியர்களுக்கு அவர்கள் பட்ட, பட்டியப் படிப்பு முடிக்கும்
வரையிலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்எனவே, 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களில் 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற
மாணவர்கள் மற்றும் 1168 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் ஆகியோருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
                              
இதையொட்டி மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண்சான்று, ஜாதிச் சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட போனோஃபைட் சான்று ஆகியவற்றின் நகல்களுடன், 12-ம் வகுப்பு பயின்ற  மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரை  வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும்
.

No comments:

Post a Comment