Wednesday 30 January 2013

6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை



              புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்..,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக,
பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
                                  இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்" என்றனர்.

No comments:

Post a Comment