Tuesday 29 January 2013

பயிற்சி முகாமில் தகவல் 5ல் ஒரு மாணவனுக்கு டிஸ்லெக்சியா



            வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 10 பேருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு உள்ளதாக சிறப்பாசிரியர்கள் பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களில் சிலருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு பிரச்னை உள்ளது. இக்குழந்தைகளின்
குறைபாடு குறித்து தெரிந்து கொள்ளாமல் ''மக்கு'' என முத்திரை குத்தி வகுப்பில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு மற்ற திறன்களில் எந்த குறைபாடும் இருக்காது. அவர்கள் படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுவார்கள். சரியான அணுகுமுறையின் மூலம் இவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்க முடியும்அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு இது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறுவள மையங்களில் 28, 29 ஆகிய தேதிகளில் ஒரு பிரிவாகவும், 30, 31 ஆகிய தேதிகளில் இரண்டாம் பிரிவாகவும் பயிற்சி வழங்கப்படுகிறது.
                              
இது குறித்து அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணியம்மாள் கூறியதாவது: டிஸ்லெக்சியா என்பது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. மூளையின் ஒரு பகுதி செயல்படாமல் இருப்பதால் கற்றல் குறைபாடு ஏற்படுகிறது. எழுத்துகள் மாறித் தெரியும், படிப்பில் கவனம் செலுத்துவதில் பிரச்னை இருக்கும். மற்ற திறன்களின் இந்தக் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கூட கற்றல் குறைபாடு உள்ளவர்களே. இந்தக் குழந்தைகளை துவக்கத்தில் அடையாளம் கண்டு சரி செய்ய வேண்டும்பல்வேறு செயல்பாடுகள் மூலம் இவர்களுக்கு ஏற்றாற் போல் கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை மாற்ற வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம் மூளையின் இன்னொரு பகுதியை தூண்டி கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இவர்களுக்கு ஆர்வம் உள்ள துறையில் சாதனையாளர்களாகவும் மாற்ற முடியும்.
                               
இதனால் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு பிரச்னை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பிரச்னை உள்ள குழந்தைகளை கண்டறிந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் சரியான அணுகுமுறையை கையாள வேண்டியுள்ளது. வகுப்பில் 50 மாணவர்களில் அதிகபட்சமாக 10 பேர் வரை இப்பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக அளவில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மணியம்மாள் கூறினார்டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தை களிடம் உள்ள மற்ற திறமைகளை கண்டறிய வேண்டும். ஒதுக்கப்படும் இவர்களை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே பெற்றோரும், ஆசிரியரும் விழிப்புடன் இருந்தால் டிஸ்லெக்சியா மாணவர்களைக் கண்டறிந்து சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்
.

No comments:

Post a Comment