Monday 21 January 2013

பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டம்



                பள்ளிக்கல்வித் துறை பதவி உயர்வில் சமமற்ற நிலையை களைய வலியுறுத்தி 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை அடித்து ஊர்வலம் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அரசினர் முஸ்லிம் மேல்நிலைப்
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் .சு.கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் .அப்துல்ரஹீம் வரவேற்றார். மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் கோ.பொன்னுசாமி, அமைப்புச் செயலர் தெ.கார்த்திகேயன், தலைமையிடச் செயலர் தே.அண்ணாதுரை உள்ளிட்டோர் உரையாற்றினர்.
                                6-
வது ஊதியக்குழு அறிக்கையை திருத்த அமைத்த ஒரு நபர் குழு அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையக் கோருவது, பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களையக் கோருவது ஆகியவற்றை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வரையில் ஆசிரியர்கள் மொட்டை அடித்துக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது
.

No comments:

Post a Comment