Thursday 24 January 2013

கூடுதல் டிஇஓக்கள் நியமிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் 29ம் தேதி போராட்டம்



           மாவட்டக் கல்வி அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கான கட்டிட பணிகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள்தான் கட்டி முடிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. இதனால் கூடுதல் பணிச்சுமையால், வழக்கமான பணிகளைக் கூட தலைமையாசிரியர்கள் செய்ய முடியவில்லை. எனவே பள்ளி கட்டுமான பணிகளை அரசே செய்ய வேண்டும்.
                                
தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. எனவே மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை கூடு தலாக உருவாக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்களை 20 சதவீதம் நேரடி நியமனம் செய்யும் முறையை கைவிட வேண்டும். அப்பணியிடங்களில் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், நகராட்சி, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்பு பள்ளி, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும். கல்விப் பணி சிறப்பாக நடைபெற பிற துறை பணிகளை ஆசிரியர்களுக்கு திணிக்க கூடாது. பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்கள் முன்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
.

1 comment:

  1. AnonymousJanuary 7, 2013 at 7:43 AM
    50:30:20:10 என்ற விகிதத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவியை நிரப்பலாம் என்று சங்கங்கள் கையெழுத்து போட்டதால் இப்பொழுது எல்லா உதவி இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலராக சேர்ந்து இன்று மாநில இயக்குனரகத்தில் அவர்களே முழுவதும் பதவிகளில் உள்ளனர். மேல் நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்து தலைமை ஆசிரியர்களாகவே ஓய்வு பெறும் சூழ் நிலையில் உள்ளனர். இல்லாவிட்டால் இவர்கள்தான் இப்போது இயக்குனராகவும் உதவி இயக்குனர்களாகவும் இருக்க வேண்டியவர்கள். நேரடியாகச் சேர்ந்தவர்கள் சிறிய வயதினராக இருப்பதினால் அவர்கள் ஓய்வு பெறுவதற்குள் தலைமையாசிரியர்கள் ஓய்வு பெற்று விடுகிறார்கள். சங்கங்கள் கையெழுத்து போடும்போது இதனை யோசிக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம்தான். பீ ஜீ டீச்சர்களாக சேர்ந்தவர்கள் எம் ஜி யார் ஆட்சிக் காலத்தில் சேர்ந்தவர்கள் என்பதால் தி மு க ஆட்சியின் போது இந்த டைரக்ட் போஸ்ட்டிங்க் முறையை திட்டமிட்டே கொண்டுவந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது தலைமை அலுவலகத்திலும் சங்கத்திலும் என்ன சூழ்நிலை என நீங்கள் விரிவாக எழுதுங்களேன்.....ப்ளஸ் டூ அறிமுகமான போது ஆசிரியராகச்சேர்ந்து தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்ற துரதிர்ஸ்டசாலி.

    Reply

    AnonymousJanuary 9, 2013 at 7:45 AM
    இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி நேரடியாக சேர்க்கப்பட்ட டீ ஈ ஓ க்கள் ட்ரைனிங்க் என்ற பெயரில் மேல் நிலைப் பள்ளிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களாகவோ அல்லது வேறு பணியில் இல்லாதவர்களாகவோ இருந்தனர். சிலர் வேறு துறைகளில் பணியாற்றியவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு அனுபவம் இல்லாதவர்களுக்கு பயிற்சி கொடுத்து பின் அவர்களை வேலைக்கு அமர்த்துவதை விட ஏற்கனவே பத்து வருடம் மேல் நிலை ஆசிரியர்களாகவும் பின் தலைமை ஆசிரியர்களாக இன்னுமொரு பத்து வருடம் இருந்த அனுபவம் வாய்ந்தவர்களை டீ ஈ ஓ க்கள் ஆக்கியிருக்கலாம். எம் ஜீ ஆர் காலத்தில் பணியில் சேர்ந்தவர்கள் தி மு க காலத்தில் பலி வாங்கப்பட்டார்கள் என்றால் இப்போது தி மு க காலத்தில் பணியில் சேர்ந்த சாலை பணியாளர்களை அதிமுக பலி வாங்கிவிட்டது. இவர்களின் செஸ் விளையாட்டில் மாட்டிக் கொண்ட காயின்களாய் மாட்டிக் கொண்டது அரசு ஊழியர்கள்தான்.
    written in WWW.CRSTTP.BLOGSPOT.COM

    ReplyDelete