Sunday 27 January 2013

ஒப்பந்த அடிப்படையில் 23 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு.



                               உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை ஜன.24- ஒப்பந்த அடிப் படையில் 23-ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழாசிரியைக்கு ஓய்வூதிய பலன்களைத் தர உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள குண்டூர் தொடக்கப்பள்ளி தமிழாசிரியை லலிதா 1987ல்
இடைநிலை பள்ளி ஆசிரியையாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர் ஒவ்வொரு கல்வியாண்டு முடிவிலும் பணியை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப் படையில் 1991இல் வடமலை கிராம நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். 23 ஆண்டுகள் பணியாற்றிய அவரை பள்ளிக் கல்வித் துறை நிரந்தரம் செய்யவில்லை. 2010 செப்டம்பர் 30ஆம் தேதி அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு ஊக்க ஊதியம், பிராவிடண்ட் பண்ட் , விடுமுறைக்கால சம்பளம் உள்ளிட்ட எந்த ஓய்வூதிய பலன்களும் தரப்படவில்லை.
                          
அவர் பலமுறை தன்னை நிரந்தரம் செய்ய கோரி பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பியும், பணியில் சேர்ந்த போது வயது வரம்பில் 9 மாதங்கள் அதிகம் இருந்ததால் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித் துறை நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து அளித்த உத்தரவு வருமாறு; தமிழக பள்ளிக்கல்வித்துறை 1989-ல் பிறப்பித்த அரசாணையில் இடைநிலை பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகள், தமிழ்பண்டிட்டுகளின் வயது வரம்பை தளர்த்தி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரர் 23 ஆண்டுகள் எந்த பலன்களையும் பெறாமல் ஓய்வு பெற்றிருப்பது கொடுமையானது.  அவரது வயது வரம்பைத் தளர்த்தி நிரந்தரம் செய்திருக்க வேண்டும். பொதுவான காரணத்தைக் கூறி அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தது சரியான நடை முறையல்ல.
                    
இந்த நடவடிக்கை 1989ல் அரசு வெளியிட்ட அரசாணைக்கு முரணானது. எனவே, மனுதாரரை நிரந்தரம் செய்ய முடியாது என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து கணக்கிட்டு அவரை நிரந்தரம் செய்து அவருக்குரிய ஊக்க ஊதியம், விடுமுறை சம்பளம் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் 2 மாதங்களில் தரவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment