Tuesday 1 January 2013

டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 2013-ம் ஆண்டு நடத்தப்படும் தேர்வு காலஅட்டவணை தயாரிப்பு தீவிரம்



                                ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? ஆகிய விவரங்களுடன் வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (ஆனுவல் பிளானர்) வெளியிடும் முறையை கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி.
இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடிந்தது. காலவரையுடன் தேர்வு முடிவு தேதி, நேர்முகத் தேர்வு, இறுதி முடிவு ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
                 இந்த நிலையில், 2013-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. காலி இடங்கள் பற்றிய பட்டியல் 75 சதவீதம் பெறப்பட்டுவிட்டன. இன்னும் ஒருசில துறைகளில் இருந்து குறிப்பிட்ட சில பதவிகளுக்கான காலி இடங்களின் பட்டியல் வரவேண்டியுள்ளது. அதுவும் கிடைக்கப்பெற்றதும் 2013-ம் ஆண்டுக்கான காலஅட்டவணை இறுதி செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment