Friday 11 January 2013

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரியில் நேர்காணல்



            குரூப்-1 பணியிடங்களுக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கான நேர்காணல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பிப்ரவரி, 1, 2, 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. துணை கலெக்டர், வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலிப்
பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 28, 29ம் தேதி, எழுத்துத் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்- டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. நேர்முகத் தேர்வில் பங்கேற்பது குறித்த விவரங்கள், போட்டியாளர்களுக்கு விரைவில் அனுப்பப்படும். நேர்காணலின் போது, போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பெறலாம்.

No comments:

Post a Comment