Thursday 17 January 2013

மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுக்கு விண்ணப்பிக்க பிப்.,10 கடைசி



            மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறன் வீரர்கள் பிப். 10ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்
திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளையின் சார்பில் 12-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி பிப். 16ம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற உள்ளது.
                            
இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறன் வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 10-ம் தேதிக்குள் 21 ஏஏ, ஏரிக்கரை சாலை, கோட்டூர், சென்னை - 65 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment